வரலாற்றில் முதல்முறை..! கொரோனா தாக்கத்தால் பூஜ்ஜியம் டாலருக்கும் கீழே சென்ற கச்சா எண்ணெய் விலை.!

Crud oil price decreased below to zero dollar


Crud oil price decreased below to zero dollar

கொரோனா தாக்கம் காரணமாக கச்சா எண்ணெயின் விலை பூஜ்யம் டாலருக்கு கீழே குறைந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் காரணமாக அனைத்து  நாடுகளும் பெரும் பாதிப்புகளையும், இழப்புகளையும் சந்தித்துவருகிறது. குறிப்பாக பெரும்பாலான நாடுகளில் ஊரடங்கு அமலில் உள்ளதால் அனைத்துவிதமான தொழில்களும் முடங்கியுள்ளது. குறிப்பாக போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.

இந்தியா போன்ற பெரியநாடுகளிலும் போக்குவரத்துக்கு நிறுத்தப்பட்டதால் பெட்ரோல் - டீசல் தேவைகள் பெருமளவில் குறைந்துள்ளன. தேவைகள் குறைந்துள்ளதால் நிறுவனங்களிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதும் வெகுவாக குறைந்துள்ளது. கச்சா எண்ணையின் விலையில் தொடர்ச்சியாக வீழ்ச்சி ஏற்பட்டுவரும்நிலையில், ஒரு பேரல் கச்சா எண்ணெயின் விலை பூஜ்ஜியம் டாலருக்கும் கீழே சென்றுள்ளது.

உற்பத்தி செய்யப்பட்ட கச்சா எண்ணெய்களை வாங்கவும் ஆள் இல்லாமல், அவற்றை வைப்பதற்கு இடமும் இல்லாமல் எண்ணெய் நிறுவனங்கள் தவித்துவருகிறது.