கொரோனா தடுப்பு மருந்து சோதனையில் வெற்றி.. அடுத்தது என்ன? சீனாவிலிருந்து வந்த மகிழ்ச்சி செய்தி!

கொரோனா தடுப்பு மருந்து சோதனையில் வெற்றி.. அடுத்தது என்ன? சீனாவிலிருந்து வந்த மகிழ்ச்சி செய்தி!



corono-vaccine-test-success-at-china-against-monkey

சீனாவில் கொரோனா தடுப்பு மருந்தினை குரங்கிடம் சோதனை செய்ததில் வெற்றிபெற்றுள்ளதாக சீனா அறிவித்துள்ளது.

சீனாவில் துவங்கி உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரசால் இதுவரை 270000 பேருக்கு மேல் உயிரிழந்துள்ளனர். ஆனால் இதற்கான தடுப்பு மருந்து இதுவரை கண்டுபிடிக்க முடியாமல் உலகின் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் திணறி வருகின்றனர்.

தற்போது கொரோனாவிற்கான தடுப்பு மருந்தினை கண்டுபிடித்துவிட்டதாகவும் குரங்கிடம் நடத்தப்பட்ட சோதனையில் வெற்றிபெற்றுள்ளதாகவும் சீனாவின் பெய்ஜிங்கை சேர்ந்த சினாவாக் பயோ டெக்னாலஜி என்ற நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் அடுத்தகட்டமாக இந்த சோதனை மனிதர்களிடம் நடத்தப்படும் என கூறியுள்ளது.

vaccine test

அவர்கள் கண்டுபிடித்த தடுப்பு மருந்தினை இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒரு குரங்கிற்கு செலுத்தியுள்ளனர். அதன் பின் 3 வாரங்கள் கழித்து அதே குரங்கு மற்றும் வேறு ஒரு குரங்கிற்கு கொரோனா வைரஸை செலுத்தியுள்ளனர். இதில் தடுப்பு மருந்து செலுத்தப்படாத குரங்கிற்கு கொரோனா தாக்கத்தால் ஒருவாரம் கழித்து மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது.

ஆனால் தடுப்பு மருந்து செலுத்தப்பட்ட குரங்கின் உடலில் கொரோனா வைரஸிற்கு எதிரான சக்தி தோன்றியுள்ளது. இதனால் கொரோனா வைரஸ் செலுத்தப்பட்ட ஒரு வாரத்திற்கு பின்னரும் அந்த குரங்கின் நுரையீரலில் கொரோனா தொற்று ஏற்படவில்லை என்பதை சீனா ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். தற்போதைய இந்த வெற்றிக்கு பிறகு மனிதர்களிடம் சோதனையை செய்ய அவர்கள் முயற்சி எடுத்து வருகின்றனர்.