உலகம் Covid-19

அதிர்ச்சி.! உலகளவில் 20 லட்சத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு..! 126,754 பேர் உயிர் இழப்பு.! சோகத்தில் உலக நாடுகள்.

Summary:

Corono positive cases reach 2 million

சீனாவின் உஹான் நகரில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் இழப்புகளை ஏற்படுத்திவருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த உலக நாடுகள் ஒருபுறம் போராடிவந்தாலும், கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், உயிர் இழப்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சற்றுமுன் 20 லட்சத்தை தாண்டியுள்ளது. 126,754 பேர் இந்த கொடிய வைரஸ் பாதிப்பால் உயிர் இழந்துள்ளனர். வல்லரசு நாடுகளில் ஒன்றான அமெரிக்கா கொரோனாவால் அதிக பாதிப்புகளையும், உயிர் இழப்புகளையும் சந்தித்து முதல் இடத்தில் உள்ளது.

அதேபோல் உலகளவில் 483,573 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். இந்தியாவை பொறுத்தவரை சமீபகாலமாக பாதிப்புகளின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. தற்போதுவரை 11,487 பேர் இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 393 பேர் உயிர் இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Advertisement