உலகம் மருத்துவம்

இந்த வகை இரத்தம் கொண்டவர்களைத்தான் கொரோனா அதிகம் தாக்குகிறதாம்..! சீன மருத்துவர்கள் விளக்கம்.!

Summary:

Corono may affect A type blood group significantly

சீனாவின் உஹான் நகரில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் குடும்பத்தை சேர்ந்த COVID - 19 வைரஸ் உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவருகிறது. இந்த வைரஸ் தாக்குதலால் இதுவரை 8000 கும் அதிகமானோர் உயிர் இழந்துள்ளனர். இந்தியாவிலும் வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.

இந்நிலையில், A வகை இரத்தம் கொண்டவர்களையே இந்த வைரஸ் அதிகம் தாக்குவதாக சீனா ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். சுமார் 2000 பேரிடம் எடுக்கப்பட்ட இரத்த மாதிரியில், ஏ ரத்த வகை கொண்டவர்களுக்குதான் பாதிப்பும் அதிகம் உள்ளது தெரியவந்துள்ளது.

ஓ ரத்த வகை கொண்டவர்களுக்கு இந்த வைரஸ் பாதிப்பு சற்று குறைவாக இருப்பதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். எனவே, ஏ வகை இரத்தம் கொண்ட கொரோனா நோயாளிகளை கையாளும்போது தனிப்பட்ட முறையில் பாதுகாப்பு அதிகம் தேவை எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.


Advertisement