நாங்கள் எதிர்பார்த்ததை விட கொரோனா மிகவும் கொடியது..! கொரோனா பரவலால் பதறும் உலக சுகாதார நிறுவனம்.!



corono-is-more-dangerous-than-what-we-are-expecting-say

நாங்கள் நினைத்ததைவிட கொரோனாவின் தாக்கம் அதிகளவில் இருப்பதாக உலக சுகாதார அமைப்பு (WHO) தெரிவித்துள்ளது. சீனவின் உஹான் நகரில் இருந்து பரவ தொடங்கிய இதை கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவருகிறது.

70 கும் அதிகமான நாடிகளில் பரவியுள்ள இந்த வைரஸ் தற்போது இந்தியாவிலும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்ட வருகிறது. உலகளவில் பல்வேறு துறைகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள இந்த வைரஸ் குறித்து உலகளாவிய பெருந்தொற்று நோய் (Pandemic) என நேற்று உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.

corono

மேலும், நாங்கள் எதிர்பார்த்தைவிட மிக வேகமாகவும், விரைந்தும் இந்த வைரஸ் உலகம் முழுக்கப் பரவுவதாகவும், நாங்கள் கணித்ததைவிடவும் அதிகமான இறப்புகள் கொரோனாவால் ஏற்பட்டுவிட்டன என்பதாலும் இப்போது இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக WHO அதிகாரிகள் கூறியுள்ளனர்.