குறைய தொடங்கியது கொரோனா வைரஸ் இறப்பு விகிதம்..! நல்ல செய்தி கூறிய சீனா..!



corono-death-rate-decreased-latest-update

சீனவின் உஹான் நகரில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவருகிறது. இந்த வைரஸ் தாக்குதலால் இதுவரை 2700 கும் அதிகமானோர் உயிர் இழந்துள்ளனர். 70 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

இந்நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பும், அதனால் ஏற்படும் இறப்பு விகிதமும் படிப்படியாக குறைந்து வருவதாக சற்று ஆறுதலனான செய்தியை வெளியிட்டுள்ளது சீனா அரசாங்கம். அதன்படி, பிப்ரவரி முதல் வாரத்தில் ஹூபெய் மாகாணத்தில் தினமும் சராசரியாக 2000 பேருக்கு மேல் பாதிக்கப்பட்டதாகவும், ஆனால் நேற்றைய நிலவரப்படி புதிதாக 409 பேருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது எனவும் சீனா கூறியுள்ளது.

corono

மேலும், உஹான் நகரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் நேற்று 26 பேர் மட்டுமே உயிர் இழந்ததாகவும், ஒட்டுமொத்தமாக சீனாவில் 29 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வருவது அனைவர்க்கும் சற்று ஆறுதலை கொடுத்துள்ளது.