இந்தியா உலகம்

4,22,566 பேர் பாதிப்பு..! 18,887 உயிரிழப்பு..! உலக நாடுகளை நடுநடுங்க வைத்துவரும் கொரோனா..!

Summary:

Corono death count world wide

சீனாவின் உஹான் நகரில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவருகிறது. இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், இன்றில் இருந்து 21 நாட்களுக்கு முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்தை கடந்துள்ளது. கொரோனாவால் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 18 ஆயிரத்தை தாண்டியுள்ளது. சீனாவில் இதுவரை 81 ஆயிரத்து 218 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 3281 பேர் உயிரிழந்துள்ளனர்.

இத்தாலியை பொறுத்தவரை 69,176 கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 6, 820 அந்நாட்டில் உயிர் இழந்துள்ளனர். அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் மட்டும் 11 ஆயிரத்து 74 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.  775 பேர் கொரோனோவால் அமெரிக்காவில் உயிர் இழந்துள்ளனர்.

ஸ்பெயின், ஈரான் போன்ற நாடுகளில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், இறப்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது.


Advertisement