22,340 பேர் உயிரிழப்பு.. 503,203 பேர் பாதிப்பு..! கொரோனா பாதித்தவர்களின் தற்போதைய உலக நிலவரம்.!



corono-current-death-and-recovered-count-worldwide

சீனாவின் உஹான் நகரில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் வேகமாக பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவருகிறது. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. கொரோனா வைரஸை கட்டுப்படுத்த உலக நாடுகள் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது.

இந்நிலையில், கடந்த டிசம்பர் மாத்தில் இருந்து பரவ தொடங்கிய இந்த வைரஸ் உலகளவில் இதுவரை 503,203 பேரை பாதித்துள்ளது. இதில், தற்போதைய நிலவரப்படி 121,227 பேர் சிகிச்சை மூலம் குணமாகி வீட்டிற்கு திரும்பியுள்ளனர். 22,340 பேர் கொரோனவால் உயிர் இழந்துள்ளனனர்.

corono

மீதமுள்ள 359,636 பேர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர். கொரோனோவால் இதுவரை வயதானவர்கள் மட்டுமே அதிகமாக பாதிக்கப்பட்டு உயிரிழந்துவருவது குறிப்பிடத்தக்கது.