இந்தியா Covid-19

கடந்த 24 மணி நேரத்தில் 6 ஆயிரம் பேர் பலி.! வாட்டி வதைக்கும் கொரோனா.!

Summary:

உலகம் முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு 6 ஆயிரத்து 60 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.  நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மற்றும் பலியானவர்களின் எண்ணிக்கை உலக அளவில் அதிகரித்து கொண்டே வருகிறது.  இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்து 96 ஆயிரத்தை கடந்துள்ளது. 

உலகம் முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு 6 ஆயிரத்து 60 பேர் உயிரிழந்துள்ளனர். உலக நாடுகளில் அதிகபட்சமாக கடந்த 24 மணி நேரத்தில் அமெரிக்காவில் 951 பேரும், பிரேசிலில் 716 பேரும் கொரோனா தாக்குதலுக்கு பலியாகியுள்ளனர். 

உலக அளவில் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 3 கோடியே 87 லட்சத்து 43 ஆயிரத்து 864 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பாதிப்பு மற்றும் உயிரிழப்புகள் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. அங்கு இதுவரை  2,21,843 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழப்பு பட்டியலில் பிரேசில் 1,51,779 உயிரிழப்புகளுடன் இரண்டாவது இடத்திலும்,  இந்தியா 1,11,311 உயிரிழப்புகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளது.
 


Advertisement