ஒரே நாளில் அமெரிக்காவில் அதிபட்ச உயிரிழப்பு! திணறும் அமெரிக்கா!
ஒரே நாளில் அமெரிக்காவில் அதிபட்ச உயிரிழப்பு! திணறும் அமெரிக்கா!

கொரோனா பாதித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் முதல் இடத்தில் இருக்கும் அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 4,591 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்காவில் இன்று காலை நிலவரப்படி 6 லட்சத்து 77 ஆயிரத்து 570 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 34 ஆயிரத்து 617 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் அமெரிக்காவில் கொரோனா தொற்றால், 4,491பேர் பலியாகியுள்ளது தான் அந்நாட்டில் கொரோனா வைரசால் ஒரே நாளில் பலியான அதிகபட்ச எண்ணிக்கையாகும்.
சீனாவில் துவங்கிய கொரோனா வைரஸால் உலகிலேயே உயிரிழப்பு அதிகம் பாதித்த நாடக அமெரிக்கா கொண்டுள்ளது, உலகின் வல்லரசு நாடக திகழும் அமெரிக்கா கொரோனாவை கட்டுப்படுத்த திணறி வருகிறது. இந்தியாவில் சரியான நேரத்தில் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியதால் கொரோனா பரவல் சற்று தடுக்கப்பட்டது.