உலகம் மருத்துவம்

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை எவ்வளவு?

Summary:

Corona death increase

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 721,412 ஆக உள்ளது.  தற்போதைய நிலவரப்படி 33,956 பேர் உயிரிழந்துள்ளனர்.

சீனாவில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் வேகமாக பரவிவருகிறது. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. கொரோனவை தடுக்க உலக நாடுகள் அனைத்தும் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே முடங்கி உள்ளனர். 

சீனாவின் உகான் நகரை பிறப்பிடமாக கொண்ட கொரோனா வைரஸால், அமெரிக்கா,  இத்தாலி, ஸ்பெயின் ஆகிய நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. 

அமெரிககாவில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது.   உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 721,412 ஆக உள்ளது.  தற்போதைய நிலவரப்படி 33,956 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவை பொறுத்தவரை 979 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 27 பேர் உயிரிழந்துள்ளனர்.


Advertisement