மருந்து கண்டுபிடிக்க முடியாத கொடூர வைரஸ்! 10 ஆயிரத்தை தாண்டியது பலியானவர்களின் எண்ணிக்கை!

மருந்து கண்டுபிடிக்க முடியாத கொடூர வைரஸ்! 10 ஆயிரத்தை தாண்டியது பலியானவர்களின் எண்ணிக்கை!



corona death increase

சீனாவில் தொடங்கிய கொரோனோ வைரஸ் இன்று உலகின் பல நாடுகளிலும் பரவி உலகத்தையே அச்சுறுத்தி வருகிறது. கொரோனா வைரஸை தடுக்க உலக அளவில் பாதுகாப்பு தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுவரை எந்த நாட்டிலும் இந்த வைரஸிற்கு மருந்து கண்டுபிடிக்க முடியவில்லை. 

கொரோனாவை தடுக்க மருந்து கண்டுபிடிக்கும் ஆய்வில் மருத்துவத்துறை தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அதிவேகமாக பரவி வரும் கொரோனா தாக்குதலுக்கு இதுவரை உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2.30 லட்சத்தை கடந்துள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10000ஆக அதிகரித்துள்ளது.

corona

இத்தாலியில் இதுவரை 41035 பேருக்கு பாதிப்பும் 3405 உயிரிழப்பும் ஏற்பட்டுள்ளது. சீனாவில் 80,928 பாதிப்பும் 3245 உயிரிழப்பும் பதிவாகியுள்ளன. ஈரான் - 1,284 பேர், ஸ்பெயின் - 831 பேர், இதையடுத்து இந்தியாவில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த பாதிப்பு சீனாவை விட குறைவாக இருந்தாலும் உயிரிழப்பு சீனாவை விட இத்தாலியில் அதிகமாக உள்ளது.