கொரோனாவின் ஒட்டுமொத்த பாதிப்பு எவ்வளவு? எந்த நாடு முதலிடம்?
கொரோனாவின் ஒட்டுமொத்த பாதிப்பு எவ்வளவு? எந்த நாடு முதலிடம்?

உலகத்தையே அச்சுறுத்தி வரும் கொரோனாவால் உலக அளவில் இதுவரை கொரோனாவுக்கு 1.41 லட்சம் பேர் பலியாகி உள்ளனர்.
சீனாவில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. இதுவரை உலகமெங்கும் கொரோனா வைரஸ் தொற்றுநோயால் பலியானவர்களின் எண்ணிக்கை 141000ஆக உயர்ந்துள்ளது. உலகமுழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2101500 ஆக உயர்ந்து உலகத்தையே உலுக்கி வருகிறது.
உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பின் எண்ணிக்கையிலும், பலியானவர்களின் எண்ணிக்கையிலும் அமெரிக்கா தொடர்ந்து முதல் இடம் வகிக்கிறது. அமெரிக்காவில் இதுவரை 6 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பலியானவர்களின் எண்ணிக்கை 33 ஆயிரத்தை நெருங்கி வருகிறது.
ஸ்பெயின் நாட்டில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தை நெருங்கும் நிலை உள்ளது. ஸ்பெயினில் மட்டும் இதுவரை கொரோனவால் பலியானவர்களின் எண்ணிக்கை 19 ஆயிரத்துக்கும் அதிகமானோரை கடந்துள்ளது.