உலக அளவில் அதிகரித்து வரும் கொரோனா பலி எண்ணிக்கை! நேற்று மட்டும் எவ்வளவு தெரியுமா?

Corona death increase


Corona death increase

கொரோனாவால் நாளுக்கு நாள் உயிரிழப்பு அதிகரித்து வரும் நிலையில், உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 42 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

உலகத்தையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசால், நாள்தோறும் பலி எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. அந்த வகையில் நேற்று ஒரே நாளில் சுமார் 4,000 பேர் பலியாகினர். இதில், இத்தாலி, ஸ்பெயின் ஆகிய நாடுகளில் பலியானவர்கள் மட்டும் இரண்டாயிரத்துக்கும் மேல் எனக் கூறப்படுகிறது.

நேற்றுவரை உலக அளவில் கொரோனா வைரசுக்குப் பலியானோர் எண்ணிக்கை 42 ஆயிரத்தை தாண்டி 42,130 பேர் கொரோனாவால் பலியாகி உள்ளனர்.

corona

இத்தாலியில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். ஸ்பெயின் நாட்டில்  8 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர். அமெரிக்காவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,883 ஆக உயர்ந்துள்ளது. வைரசின் பிறப்பிடமான சீனாவில், நேற்று புதிதாக யாருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.