உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, உயிரிழந்தகவர்களின் எண்ணிக்கை எவ்வளவு?

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, உயிரிழந்தகவர்களின் எண்ணிக்கை எவ்வளவு?


Corona count

உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 24 லட்சத்தை கடந்துள்ளது. குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 6 லட்சத்தை தொட்டுள்ளது.

கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை உலகம் முழுவதும் நிமிடத்திற்கு நிமிடம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. உலக அளவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கையில் இத்தாலியை பின்னுக்குத்தள்ளி அமெரிக்கா முதலிடத்தை பிடித்துள்ளது. அமெரிக்காவில் கொரோனாவுக்கு 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். அதேபோல் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 7 லட்சத்தை கடந்துள்ளது‌.

corona

இத்தாலியில் கொரோனா பரவல் சற்று குறைந்து வருவதால், இத்தாலியில் கொரோனாவால் உயிரிழப்போர் எண்ணிக்கையும் சற்று குறைந்து வருகிறது. கொரோனவால் இதுவரை ஒட்டுமொத்தமாக உலகம் முழுவதும் ஒரு லட்சத்து 66 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில், கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17,656 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள நிலையில், கொரோனாவை கட்டுப்படுத்த உலக நாடுகள் அனைத்தும் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.