உலகம்

உலகமே கொரோனா பயத்தில் இருக்க நீச்சல் குளத்தில் இளம்பெண் செய்த செயல்..! வைரலாகும் வீடியோ.

Summary:

Corona

சீனாவில் உஹான் மாகாணத்தில் தொடங்கிய கொரோனோ வைரஸ் கோர தாண்டவம் இன்று பல நாடுகளிலும் பரவி வருகிறது. இதனால் பல நாடுகள் கொரோனா பரவுவதை தடுக்க நோயாளிகளை தனிமைப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் ஸ்பெயின் நாட்டின் கேனரி தீவில் உள்ள டெனஃரீப் என்ற இடத்தில் உள்ள ஹோட்டலில் கொரோனா அறிகுறியுடன் பிரிட்டன் பெண் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டார். ஆனால் அவர் அங்கு உள்ளவர்களை தாண்டி ஹோட்டலில் உள்ள நீச்சல் குளத்தில் இறங்கி குளித்துள்ளார்.

இதனை பார்த்த மற்ற மக்கள் நீச்சல் குளத்தில் இறங்காமல் வெளியே நின்றுள்ளனர். உடனே போலீசார் வந்து அந்த பெண்ணை வெளியேறுமாறு அழைத்துள்ளனர். ஆனால் அந்த பெண் அவர்கள் கூறியதை கேட்காமல் நீச்சல் குளத்திலேயே இருந்துள்ளார்.

உடனே ஒரு காவல் அதிகாரி தண்ணீரில் இறங்கி அந்த பெண்ணை வழுக்கட்டாயமாக மேலே ஏற்றியுள்ளார். இதனை அங்கு இருந்த நபர் ஒருவர் வீடியோவாக எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளார்.


Advertisement