மீண்டும் நாய், பூனை, வௌவால் விற்பனையை தொடங்கிய சீனர்கள்..! கொரோனா வெற்றியை கொண்டாட சலுகை விலை.!

மீண்டும் நாய், பூனை, வௌவால் விற்பனையை தொடங்கிய சீனர்கள்..! கொரோனா வெற்றியை கொண்டாட சலுகை விலை.!


chinese-markets-selling-bats-again-after-corono

சீனாவின் உஹான் நகரில் இருந்து பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் வேகமாக பரவி பல்வேறு உயிர்களை காவு வாங்கி வருகிறது. உலகில் உள்ள அணைத்து நாடுகளும் கொரோனாவால் சிக்கி தவிக்கின்றன. இதுவரை கொரோனா பாதிப்பால் 30 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிர் இழந்துள்ளனனர்.

கொரோனாவை கட்டுப்படுத்த உலகநாடுகள் அனைத்தும் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது. இந்நிலையில், சீனாவில் உஹான் மார்க்கெட்டில் விற்கப்பட்ட இறைச்சி மூலமே கொரோனா பரவியதாக கூறப்பட்டுவருகிறது. பாம்பு, எறும்பு தின்னி அல்லது வௌவால்கள் மூலம் கொரோனா பரவியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

corono

கொரோனாவின் பிடியில் சீனா சிக்கி தவித்தபோது இதுபோன்ற உணவு பொருட்களை விற்பனை செய்ய அந்நாட்டில் கடும் தடைகள் விதிக்கப்பட்டிருந்தது. தற்போது, சீனா கொரோனாவின் பிடியில் இருந்து மீண்டுவந்திருப்பதை கொண்டாட மீண்டும் சீனர்கள் வவ்வால்கள், பூனைகள், நாய்கள் போன்றவற்றை விற்பனையை தொடங்கி விட்டனர்.

சீனாவின் குயிலின் மார்க்கெட்டில் இதுபோன்ற இறைச்சிகள் சலுகை விலையில் விற்பனை செய்வதாக செய்திகள் வெளியாகியுள்ளது. உலகமே கொரோனாவின் பிடியில் இருக்கும்போது சீனர்கள் மீண்டும் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டிருப்பது உலக நாடுகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.