கொரோனா வைரஸால் உலகநாடுகளே அச்சத்தில் மூழ்கியிருக்கும் நிலையில், மருத்துவர் செய்த காரியம்! குவியும் பாராட்டுக்கள்!



chinese-doctor-resuscitates-elderly-man-amid-coronaviru

சீனாவில் வுஹான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகில் பல நாடுகளிலும் அதிதீவிரமாக பரவி வருகிறது. இந்த கொரோனா வைரஸ் தாக்குதலால் இதுவரை 2500க்கும் அதிகமான பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 80000க்கும் அதிகமானோர்  பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் சீனாவில் உள்ள அனைவரும் எப்பொழுதும் பெரும் கலக்கத்திலேயே உள்ளனர்.

இந்நிலையில் மத்திய சீனாவின் ஹெனான் மாகாணத்தில் உள்ள ஜெங்கோ என்ற பகுதியில் 80 வயது நிறைந்த வயதான முதியவர் ஒருவர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு தரையில் சரிந்து விழுந்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அருகிலிருந்தவர்கள் சத்தம் போட்டுள்ளனர். இதை கேட்டு ஓடி வந்த மருத்துவர் லூயோ சியாங்கோ சற்றும் யோசிக்காமல் தனது முகமூடியை கழட்டி விட்டு முதியவரின் வாய் மீது வாய் வைத்து உயிரோட்டம் கொடுத்துள்ளார்.அதனைத் தொடர்ந்து சில நிமிடங்கள் கழித்து அவருக்கு இதயத்துடிப்பு மீண்டும் தொடங்கியது.

Coronovirus

இதனைத்தொடர்ந்து உடனடியாக மருத்துவமனைக்கு அந்த நபர் அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக கூறப்படுகிறது
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பெரும் அச்சத்தில் மூழ்கியிருக்கும் நிலையில் அதனை பற்றி சிறிதும் கவலைப்படாமல் முதியவர் ஒருவரின் உயிரை காப்பாற்ற எண்ணி துணிந்த மருத்துவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.