உலகம்

கொரோனா வைரஸால் நிலைகுலைந்து போயிருக்கும் நிலையில், சீனாவிற்கு மீண்டும் இப்படியொரு சோதனையா! தொடரும் உயிரிழப்புகளால் அதிர்ச்சி!

Summary:

china hotel building collapse 10 people dead

 வைரஸ் தற்போது 70-க்கும் மேற்பட்ட நாடுகளில் அதிதீவிரமாக பரவி வருகிறது. மேலும் இந்த கொரோனா வைரஸ் தாக்குதலால்  இதுவரை ஒரு லட்சத்திற்கும் அதிகமான பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.மேலும் 3000க்கும் அதிகமானோர் பேர் உயிரிழந்துள்ளனர். இத்தகைய வைரஸ் தாக்குதலால் சீன நாடு பொருளாதாரத்தை இழந்து நிலைகுலைந்து போயுள்ளது. மேலும் பல நாடுகளும் உயிரை குடிக்கும் இந்த கொரோனா வைரஸால் பெரும் அச்சத்தில் மூழ்கியுள்ளது.

சீனாவிற்கு இப்படியொரு துயம் இருக்கும் நிலையில் தனியார் ஹோட்டல் கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்து உயிரிழப்பை உண்டாக்கியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவில் உள்ள quanzhou நகரில் உள்ளே 5 மாடி தனியார் ஹோட்டலில் கொரோனா நோயாளிகள் உட்பட 71 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு உடையவர்கள் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர். இந்நிலையில் அந்த ஹோட்டல் கட்டிடம் திடீரென சரிந்து விழுந்து பெரும் விபத்து உண்டானது. இந்த கட்டிடத்தின் இடிபாடுகளில்  சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 10 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 23 பேரின் நிலை என்னவென்று தெரியவில்லை, பிறர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர் என தகவல் வெளிவந்துள்ளது. கொரோனா வைரஸ் தாக்குதலால் சீன நாடு நிலைகுலைந்து போயிருக்கும் நிலையில் நடந்த இந்த சம்பவம் சீனாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 


Advertisement