முதன் முதலில் கொரோனோவை கண்டறிந்து எச்சரித்த மருத்துவர் லீ..! அவர் இறந்த பிறகு மனம் வருந்தி மன்னிப்பு கேட்டது சீனா..!!

முதன் முதலில் கொரோனோவை கண்டறிந்து எச்சரித்த மருத்துவர் லீ..! அவர் இறந்த பிறகு மனம் வருந்தி மன்னிப்பு கேட்டது சீனா..!!



China government oligopolies to doctor lee family

சீனாவின் உஹான் நகரில் இருந்து பரவ தோடணியை கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவருகிறது. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்ட வருகிறது.

இந்நிலையில், கொரோனா வைரஸ் குறித்து கண்டறிந்து, அதனை உலகிற்கு தெரிவித்த சீன மருத்துவர் லீ அவர்களுக்கு சீனா போலீசார் மனம் வருந்தி மன்னிப்பு கேட்டுள்ளனர். இதுகுறித்து வெளியாகியுள்ள அறிக்கையில், மருத்துவர் லீ வென்லியாங்தான் கொரோனா குறித்து எங்களுக்கு முதலில் தெரிவித்தார்.

ஆனால், நாங்கள் அவர் பேச்சை கேட்கவில்லை, அவருக்கு எதிராகவே வழக்கு தொடர்ந்தோம், ஒருவேளை அவர் எச்சரித்தபோதே நாங்கள் துரிதமாக செயல்பட்டிருந்தால் இந்த வைரஸை அப்போதே ஒளித்திருக்கலாம் ஆனால் நாங்கள் தவறிவிட்டோம், தற்போது தங்கள் தவறுக்கு மனம் வருத்தி மருத்துவர் லீ வென்லியாங் குடும்பத்தாரிடம் மன்னிப்பு கேட்பதாக கூறப்பட்டுள்ளது.

corono

மேலும், அவருக்கு எதிரான வழக்கை வாபஸ் பெறுகிறோம். இவரது குடும்பத்துக்கு தக்க இழப்பீடு வழங்கப்படும் என்று அரசு கூறியுள்ளது. மருத்துவர் லீ வேலை பார்த்த மருத்துவமனையில், கடந்த வருடம் டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் காய்ச்சல் காரணமாக பலர் அனுமதிக்கப்பட்ட நிலையில், 8 பேருக்கு ஒரே மாதிரியான வைரஸ் தாக்கியிருந்ததும், அந்த வைரஸ் சார்ஸ் உருவாக காரணமாக இருந்த கொரோனா வைரஸ் குடும்பத்தை சேர்த்த வைரஸ் போலவே இருந்ததை மருத்துவர் லீ கண்டுபிடித்தார்.

மேலும், இதுகுறித்து சக மருத்துவர்களுக்கும், அரசுக்கும் தெரிவித்தார். ஆனால், சீனா அரசு அவர் மீது வழக்கு பதிவு செய்தது. இறுதியில் லீ பிப்ரவரி 7-ம் தேதி கொரோனா வைரஸால் தாக்கப்பட்டு பலியானார். தற்போது சீன மக்கள் இவரை ஹீரோவாக கொண்டாடிவருகின்றனர்.