கொரோனா வைரஸ் தாக்கி கோமாவிற்கு சென்ற குழந்தை! 54 நாட்களுக்கு பிறகு நடந்த அதிசயம்!child-coma-stage-for-corona

பிரேசில் நாட்டில் பிறந்து சில மாதங்களே ஆன ஆண் குழந்தைக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது. இதனையடுத்து குழந்தை சுவாசிக்க சிரமப்பட்டதை பார்த்த குழந்தையின் தாய், அங்குள்ள மருத்துவமனையில் அனுமதித்தார். குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தைக்கு கொரோனா இருப்பதை உறுதி செய்தனர்.

 இதனையடுத்து குழந்தை மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்தது. ஆனாலும் அந்த குழந்தையின் உடல்நிலை மோசமானது. இதனால் குழந்தை கோமா நிலைக்கு சென்றது. அந்த குழந்தைக்கு செயற்கை சுவாச கருவி பொருத்தப்பட்டது. இந்தநிலையில் அந்த குழந்தையை மருத்துவமனையில் சேர்த்து 54 நாட்கள் ஆன நிலையில், அந்த குழந்தை உயிர் பிழைத்தது. 

corona

இதுகுறித்து, குழந்தையின் தந்தை கூறுகையில், “எங்கள் குழந்தைக்கு கொரோனா பரவியது எப்படி என்று தெரியவில்லை. உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தபோது பரவியிருக்கலாம்" என தெரிவித்தார். அதேபோல் குழந்தையின் தாய் கூறுகையில், “ எங்கள் மகன் உயிர்பிழைத்தது அதிசயமான ஒன்று, மருத்துவர்களுக்கும், கடவுளுக்கும் நன்றி" என மகிழ்ச்சியுடன் கூறினார்.