உஷார்! மெழுகுவர்த்தியுடன் விளையாடிக்கொண்டிருந்த 5 வயது சிறுமி! கண்ணிமைக்கும் நொடியில் நேர்ந்த விபரீதம்!

உஷார்! மெழுகுவர்த்தியுடன் விளையாடிக்கொண்டிருந்த 5 வயது சிறுமி! கண்ணிமைக்கும் நொடியில் நேர்ந்த விபரீதம்!


child-attacke-by-fire-from-candle

அமெரிக்காவை சேர்ந்தவர் ரெபெக்கா. இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் அவர் தனது 5 வயது மகள் கியானாவை அவரது பாட்டி வீட்டில் விட்டுவிட்டு வேலைக்கு சென்றுள்ளார். அங்கு அவரது  பாட்டி வாசனைக்காக நறுமண மெழுகுவர்த்திகளை பற்ற வைத்துவிட்டு உறங்க சென்றுள்ளார். 

அப்பொழுது மெழுகுவர்த்திகளுடன் விளையாடிக்கொண்டிருந்த சிறுமி, திடீரென உடல் முழுவதும் தீ பற்றிய அலறியபடி பாட்டியின் அறைக்கு ஓடிள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு பதறியடித்து எழுந்த பாட்டி, சிறுமியின் உடலில் தீ எரிவதை கண்டு பேரதிர்ச்சி அடைந்துள்ளார். பின்னர் தீயை அணைத்துவிட்டு  ஆம்புலன்ஸ் உதவியுடன்  சிறுமியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்துள்ளனர்.

CANDLE

 மேலும் ஒரு மாதத்திற்கு மேலாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அந்த சிறுமிக்கு  லேசர் அறுவை சிகிச்சை மற்றும் தொடைகளில் உள்ள தசைகளை பயன்படுத்தி காயங்கள் குணப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் அவரது கழுத்து, கைகள், முகம் மற்றும் கைகளில் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

இந்நிலையில் குழந்தைகள் இருக்கும்போது பெற்றோர்கள் மெழுகுவர்த்தியை எரிப்பதை நிறுத்துங்கள் என ரெபெக்கா வேதனையுடன்  அறிவுரை வழங்கியுள்ளார்.