தங்கசுரங்கத்தில் பயங்கர வெடிவிபத்து.. 59 பேர் பலி., 100 பேர் படுகாயம்.!

தங்கசுரங்கத்தில் பயங்கர வெடிவிபத்து.. 59 பேர் பலி., 100 பேர் படுகாயம்.!



Burkina Faso Gold Mine Explosion 59 Died 100 Injured

மேற்கு ஆப்ரிக்காவில் உள்ள நாடு பர்கினோ பசோ. இந்த நாட்டின் பாம்புலோரா பகுதியில் தங்கசுரங்கம் அமைந்துள்ளது. சுரங்கத்தில் நேற்று தொழிலாளர்கள் தங்களின் பணிகளை வழக்கம்போல கவனித்து வந்தனர். 

இந்நிலையில், சற்றும் எதிர்பாராத விதமாக சுரங்கத்தில் திடீரென வெடிவிபத்து ஏற்படவே, நிகழ்விடத்திலேயே 59 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 100 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

Burkina Faso

இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த காவல் துறையினர் மற்றும் மீட்பு படையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். மேலும், படுகாயமடைந்தோரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

முதற்கட்ட விசாரணையில், தங்கசுரங்கத்தில் வைக்கப்பட்டு இருந்த தங்க சுத்திகரிப்பு ரசாயனங்கள் வெடித்து சிதறி விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்த விசாரணை நடந்து வருகிறது.