உலகம்

துடிக்கும் ஆமைக்கு காட்டெருமை செய்த சிலிர்க்க வைத்த காட்சி! ஒரு மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை பெற்ற வீடியோ இதோ...

Summary:

துடிக்கும் ஆமைக்கு காட்டெருமை செய்த சிலிர்க்க வைத்த காட்சி! ஒரு மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை பெற்ற வீடியோ இதோ...

மனிதன் சக மனிதனுக்கு உதவி செய்வதை காட்டிலும் விலங்குகள் அதன் இனத்திற்கு பல மடங்கு அறிந்தும் பல அறியாமலும் உதவிகளை செய்கின்றன. இவ்வாறு விலங்குகளை குறித்து பல  வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி, சில  ரசிக்கும் விதமாகவும்,  பல  ஆச்சர்யபட கூடிய  அளவுக்கும் உள்ளன.

அந்த  வகையில் குப்புற கவிழ்ந்து தவிக்கும் ஆமைக்கு காட்டெருமை உதவி செய்யும் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இந்த  குறிப்பிட்ட வீடியோவில், விலங்குகள் அருங்காட்சியத்தில் குப்புற கவிழ்ந்து  தவிக்கும் ஆமைக்கு அங்குள்ள காட்டெருமை  ஒன்று அதன் கொம்பால் அதற்கு உதவி செய்யும் வீடியோ இணையத்தில் பெரிய அளவில் வைரலாகி வருகின்றது. இதனை பார்க்கும் அங்குள்ள சுற்றுலாப் பயணிகள் உற்சாகமடைந்து கத்தி கூச்சலிட்டுள்ளனர்.

இந்த வீடியோ டிவிட்டரில் மட்டும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை கடந்துள்ளது. இதனைப் பார்த்த நெட்டிசன்கள், விலங்குகள் நம்மை விட சிறந்தவை என்று பாராட்டி வருகின்றனர்.  


Advertisement