பெரும் பதற்றத்தில் இங்கிலாந்து.! பிரதமரின் உடல்நிலை மோசம். ஐசியூவில் அனுமதிக்கப்பட்டதால் பரபரப்பு.

பெரும் பதற்றத்தில் இங்கிலாந்து.! பிரதமரின் உடல்நிலை மோசம். ஐசியூவில் அனுமதிக்கப்பட்டதால் பரபரப்பு.


Brittan PM Boris Johnson admitted in ICU

கடந்த மாதம் 26ஆம் தேதி கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனின் உடல்நிலை மோசமானதை அடுத்து அவர் இன்று அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் 55 வயதாகும் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனையும் தாக்கியது. இதனை அடுத்து கடந்த சில வாரங்களாக தனது வீட்டில் தன்னைத்தானே தனிமைப்படுத்திக்கொண்டு, வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் அரசு அதிகாரிகளுக்கும் அமைச்சர்களுக்கும் உத்தரவிட்டு நாட்டை வழிநடத்திவந்தார்.

corono

இந்நிலையில், நேற்று அவருக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டதை அடுத்து லண்டன் செயிண்ட் தாமஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதனை அடுத்து இன்று அதிகாலை அவருக்கு மூச்சு விடுவதில் மேலும் சிரமம் ஏற்பட்டுள்ளதை அடுத்து தற்போது ஐசியூவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இருப்பினும் அவருக்கு செயற்கை சுவாச கருவிகள் ஏதும் பொருத்தப்படவில்லை என கூறப்படுகிறது. இதனிடையே பிரதமரின் உடல்நிலை சற்று மோசமாகிவருவதாக தகவல்கள் வெளியானதை அடுத்து பிரிட்டனில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.