உலகம் லைப் ஸ்டைல்

மரணபடுக்கையில் காதலன் சொன்ன ஒரு சொல் ,மனமுடைந்து கதறி அழுத காதலி .!

Summary:

மரணபடுக்கையில் காதலன் சொன்ன ஒரு சொல் ,மனமுடைந்து கதறி அழுத காதலி .!

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிர் பிரியும் நிலையில் உள்ள காதலன் தனது காதலியிடம் திருமணம் செய்து கொள்வாயா?என கேட்டது அனைவரின் மனதையும் கண்கலங்க வைத்துள்ளது.

ஆஸ்திரேலியாவில் மைக்கேல் ஒவென்ஸ்என்ற 23 வயது இளைஞன் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மேற்கொண்ட மருத்துவ பரிசோதனையில் அவர் இரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டது தெரியவந்தது.

இந்நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வரும் மைக்கேல் உடன் அவரது தோழி ரோஸி இருந்து கவனித்து வந்துள்ளார்.

அப்பொழுது மைக்கேல் ரோஸியிடம் தான் காதலிப்பதாகவும்,தன்னை  திருமணம் செய்து கொள்ள சம்மதமா? எனவும்  கேட்டுள்ளார்.

 இதைக்கேட்ட ரோஸி எவ்வித தயக்கமும் இன்றி திருமணம் செய்து கொள்ள சம்மதம் தெரிவித்துள்ளார்.

 மேலும் இவ்வாறு திருமணம் குறித்து பேசிய சில மணி நேரங்களில் மைக்கேல் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

 இந்த சம்பவம் ரோஸியை  உருக்குலைய வைத்து அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.


 


Advertisement