உலகம் Covid-19 Corono+

ஐசியூவில் இருந்து வெளியேறினார் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன்.! உடல்நிலையில் நல்ல முன்னேற்றம்.!

Summary:

Boris Johnson out of intensive care but remains in hospital

கொரோனா வைரஸ் காரணமாக லண்டன் St.தாமஸ் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டிருந்த இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் இன்று அவசர சிகிச்சை பிரிவில் இருந்து சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

கொரோனா பாதிப்பு உறுதியானதை அடுத்து இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் வீட்டில் தன்னை தானே தனிமைப்படுத்திக்கொண்டு வீடியோ கால் மூலம் அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கி ஆட்சி நடத்திவந்தார். இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதை அடுத்து பிரதமர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், அடுத்த நாள் காலை மூச்சு விடுவதில் மேலும் சிரமம் ஏற்பட்டதை அடுத்து அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். ஆனால், பிரதமருக்கு செயற்கை சுவாச கருவி (வெண்டிலேட்டர்) பொருத்தப்படவில்லை என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. இருப்பினும், பிரதமர் ஐசியூவில் அனுமதிக்கப்பட்ட தகவல் உலகளவில் மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.

இதனை அடுத்து, கடந்த நான்கு நாட்களாக ஐசியூவில் இருந்த போரிஸ் ஜான்சனின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதை அடுத்து நேற்று இரவு ஐசியூவில் இருந்து நார்மல் வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார். இருப்பினும் பிரதமர் மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு அனுப்பப்படவில்லை.

மருத்துவமனையிலையே வைத்து மருத்துவர்கள் பிரதமரின் உடல்நிலையை கண்காணித்துவருகின்றனர். இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையியல், பிரதமரின் உடல்நிலையில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டிருப்பது அந்நாட்டு மக்கள் மத்தியில் சற்று நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement