வீடு வீடாக சென்று புத்தகம் விற்ற வாலிபர்! நம்பி வீட்டிற்குள் அனுமதித்த ஊனமுற்ற பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்!bookseller-sexually-abused-physically-challenge-women

அமெரிக்கா டெக்சாஸ் என்ற பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெஞ்சமென் கில்பர்ட் என்பவர் புத்தகம் விற்பவர் போன்று வீடு வீடாக சென்று வந்துள்ளார். அவ்வாறு அப்பகுதியை சேர்ந்த 48 வயது நிறைந்த ஊனமுற்ற பெண் ஒருவரின் வீட்டிற்கும் புத்தகம் விற்பது போல சென்றுள்ளார். அந்தப் பெண்ணும் அவரை நம்பி உள்ளே வரவழைத்து அமர வைத்துள்ளார்.

இந்நிலையில் அந்த பெண் தனியாக இருப்பதை உணர்ந்த பெஞ்சமென் திடீரென அவரை பாலியல் வன்கொடுமை செய்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் கதறி அழுதுள்ளார். 

Book seller 

அதனைத் தொடர்ந்தும் பெஞ்சமென் அதே பகுதியில் மீண்டும் சுற்றி வந்துள்ளார். இந்நிலையில் சந்தேகமடைந்த சிலர் இதுகுறித்து போலீசுக்கு தகவல் தெரிவித்தநிலையில் அங்கு விரைந்த அவர்கள் பெஞ்சமெனை கைது செய்தனர். 

பின்னர் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டபோது,  அவர் வீட்டிற்குள் நுழைந்து பெண்ணை பலாத்காரம் செய்தது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது பெஞ்சமின்க்கு 40 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.