உலகம் லைப் ஸ்டைல்

கரை ஒதுங்கிய வினோத உயிரினம்..! இதுபோன்று பார்த்ததே இல்லை.! அதிர்ச்சியில் உறைந்த விஞ்ஞானிகள்.!

Summary:

Bizarre eyes less creature with dolphin like head photo goes viral

இந்த உலகில் நம் கண்களுக்கு தெரியாத, அறிவுக்கு எட்டாத வகையில் எத்தனையோ உயிரினங்கள் வாழ்ந்துகொண்டுதான் இருக்கின்றன. அதிலும், ஆழ்கடலில் கோடிக்கணக்கான உயிரினங்கள் வாழந்துவருகின்றது. இந்நிலையில், கண்கள் இல்லாத, பார்ப்பதற்கு மிகவும் வித்தியாசமாக இருக்கும் வினோத உயிரினம் ஓன்று மெக்சிகோ கடற்கரை பகுதியில் கரை ஒதுங்கியுள்ளது.

மெக்சிகோ நாட்டில் அமைந்துள்ள புவேர்ட்டோ வல்லார்டா கடற்கரையில் டால்பின் போன்ற தலை அமைப்புடைய இந்த உயிரிணத்துக்கு கண்கள் இல்லாமல், கொடிய பற்களுடன் வினோதமாகக்  காணப்பட்டுள்ளது. இதுபோன்ற உயிரினத்தை இதுவரை கண்டதில்லை என பலரும் தெரிவித்த நிலையில் இந்த வினோத உயிரினம் குறித்து கடல் மற்றும் வன உயிரின அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். அவர்கள் அந்த உயிரினம் குறித்து ஆராய்ந்து வருகின்றனர்.

இதுகுறித்து பேசிய ஆராய்ச்சியாளர்கள், பசுபிக் கடலின் சூரிய ஒளி புகமுடியாத மிக ஆழமான பகுதியிலிருந்து அந்த உயிரினம் வந்திருக்கலாம் எனவும், என்னேரமும் இருள் சூழ்ந்திருக்கும் அந்த பகுதியில் இந்த உயிரினம் வாழ்வதால் அதற்கு கண் தேவை படமால் இருந்திருக்கலாம் எனவும் கூறியுள்ளனர்.


Advertisement