ஜிம்மில் தீயாய் ஒர்க் அவுட் செய்யும் அட்டக்கத்தி நாயகி.! இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்!!
பரபரப்பு தீர்ப்பு... மாமனார், மாமியாருக்கு காளாணில் விஷம்.!! பெண்ணுக்கு ஆயுள் தண்டனை.!!
ஆஸ்திரேலியாவில் மாமனார் மற்றும் மாமியாருக்கு உணவில் விஷம் வைத்து கொலை செய்த பெண்ணுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. மேலும் அந்தப் பெண் 33 ஆண்டுகளுக்கு பின்னரே பரோலுக்கு விண்ணப்பிக்க முடியும் எனவும் ஆஸ்திரேலியா நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஆஸ்திரேலியாவை சேர்ந்த எரிக் பேட்டர்சன் என்ற பெண் தனது கணவன், மாமனார் மற்றும் மாமியார் ஆகியோருடன் வாழ்ந்து வந்தார். இந்நிலையில் அவரது குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது. மேலும் சிறிதாக தொடங்கிய பிரச்சனை நாளடைவில் குடும்ப வன்முறையாக மாறியிருக்கிறது. இதனால் ஆத்திரமடைந்த பேட்டர்சன் தனது கணவன் மாமனார் மற்றும் மாமியார் ஆகியோரை கொலை செய்ய முடிவு செய்தார்.

இவர் திட்டமிட்டபடி குடும்பத்தினர் சாப்பிடும் உணவில் விஷ காளானை கலந்தார். இதனை சாப்பிட்ட அந்தப் பெண்ணின் மாமனார் மற்றும் மாமியார் உயிரிழந்த நிலையில் அவரது கணவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பி வந்தார். இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இதையும் படிங்க: கள்ள தொடர்பு.. கணவன், குழந்தை கொலை.!! பெண்ணுக்கு இரட்டை ஆயுள் தண்டனை.!! காதலன் ரிலீஸ்.!!
இது தொடர்பாக சாட்சிகள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி தனது மாமியார் மற்றும் மாமனாரை கொலை செய்த பெண்ணுக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார். மேலும் அந்தப் பெண் 33 வருடங்களுக்கு பிறகு தான் பரோலுக்கு விண்ணப்பிக்க முடியும் எனவும் தீர்ப்பில் கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க: 6 வயது சிறுவன் பலாத்காரம்... 31 வயது நபருக்கு இரட்டை ஆயுள்.!! போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.!!