ஆச்சரியம் ஆனால் உண்மை.. கர்ப்பமாக இருப்பது தெரியாமல், குளியலின்போது குழந்தையை பிரசவித்த பெண்.!

ஆச்சரியம் ஆனால் உண்மை.. கர்ப்பமாக இருப்பது தெரியாமல், குளியலின்போது குழந்தையை பிரசவித்த பெண்.!


Australia Mother Delivery Baby While Bathing She Could not Know about She is Pregnant

28 வயதுடைய பெண்மணி குளியலறையில் குளித்துக்கொண்டு இருக்கும்போதே, தான் கர்ப்பமாக இருப்பது தெரியாமல் குழந்தையை பிரசவித்த சம்பவம் நடந்துள்ளது.

ஆஸ்திரேலிய நாட்டில் உள்ள நியூ சவுத் வேல் மாகாணத்தை சேர்ந்தவர் டிமிட்டி (வயது 28). இவரின் கணவர் ஜேசன் (வயது 42). தம்பதிகளுக்கு 5 மற்றும் 6 வயதுடைய 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில், கடந்த பிப்ரவரி 26 ஆம் தேதி டிமிட்டி குளியல் அறையில் குளித்துக்கொண்டு இருந்துள்ளார். 

அப்போது, அவருக்கு திடீரென உடல்நிலை மாற்றமடைந்து, அவருக்கு குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த டிமிட்டி கூச்சலிட்ட நிலையில், வீட்டினுள் இருந்த அவரின் கணவர் ஜேசன் பதறியபடி விரைந்து சென்று பார்த்துள்ளார். அப்போது, மனைவியின் உடலில் இரத்த சொட்டி, கையில் குழந்தையுடன் இருப்பதை கண்டு அதிர்ந்துள்ளார். 

பின்னர், சுதாரிப்பாக செயல்பட்டு அவரை மருத்துவமனையில் அனுமதி செய்து சிகிச்சை அளித்துள்ளனர். மருத்துவர்கள் சிகிச்சை முடிந்ததும் தாயும் - சேயும் நலமுடன் இருப்பதாக தெரிவித்துள்ளனர். இந்த விஷயம் தொடர்பாக டிமிட்டி கூறுகையில், "நான் கர்ப்பமாக இருப்பதே எனக்கு தெரியாது.

australia

எனக்கு எப்படி 3 ஆவது குழந்தை பிறந்தது என்பது இன்றுவரை எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. நான் எப்போது போல வீட்டில் குளித்துக்கொண்டு இருந்தேன். அப்போது, திடீரென எனது உடல்நிலை மாறி குழந்தை பிறந்தது. மருத்துவர்கள் இதனை ஆச்சரியமான விஷயம் என்றும், இதுபோன்று ஏற்கனவே பல நிகழ்வுகள் நடந்துள்ளன என்றும் தெரிவித்தார்கள்.

எனது வயிறு கர்ப்பிணிக்கான அடையாளத்தை தரவில்லை. மாதவிடாய் சுழற்சியும் இருந்தது. இருப்பினும் நான் குழந்தையை பிரசவித்துள்ளேன். என்னையே என்னால் நம்ப இயலவில்லை" என்று தெரிவித்தார். இந்த செய்தி தொடர்பான தகவல் நேற்று ஊடகங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.