உலகம்

கொடூர விபத்து.. இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 30 கும் அதிகமானோர் உடல் நசுங்கி பலி.

Summary:

தெற்கு பாகிஸ்தானில் இரண்டு ரயில்கள் நேருக்குநேர் மோதிய விபத்தில் 30 பேர் பலியான சம்பவம் அப

தெற்கு பாகிஸ்தானில் இரண்டு ரயில்கள் நேருக்குநேர் மோதிய விபத்தில் 30 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தெற்கு பாகிஸ்தானில் சிந்து மாகாணத்தில் உள்ள கோட்கி மாவட்டத்தில் சர் சையது என்ற விரைவு ரயிலும், மில்லத் என்ற விரைவு ரயிலும் இன்று காலை நேருக்கு நேர் மோதிக்கொண்டது.

விபத்தை அடுத்து போலீசார் மற்றும் மீட்பு குழுவினர் உடனடியான சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர். நீண்ட நேர போராட்டத்திற்கு பின் மீட்பு குழுவினர் ரயிலில் இருந்த பயணிகளை மீட்டுள்ளனர். மேலும் இச்சம்பவத்தில் 30 பேர் பலியானதாகவும், பலர் காயமடைந்துள்ளதாகவும் கோட்கி மாவட்டத்தின் போலீஸ் அதிகாரிகள் மற்றும் மீட்புக்குழுவினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்த நபர்களை மீட்பு குழுவினர் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். மேலும் ரயில்கள் எவ்வாறு தடம் புரண்டது என்றும் மோதலுக்கான காரணங்கள் குறித்தும் போலீஸ் அதிகாரிகள் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.


Advertisement