ராணுவ பாதுகாப்புடன் பெட்ரோல், டீசல் விற்பனை.! என்னாச்சு.?



army forece in srilanka petrol bunk

இலங்கையில் எரிபொருள், உணவுப்பொருட்கள், அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்வுடன், தினசரி பல மணி நேர மின்வெட்டும் அந்நாட்டு மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கின்றன. இலங்கை அரசு கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. இலங்கையில் அன்னிய செலாவணி கையிருப்பு இல்லாததால், கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய முடியாமல் இலங்கை அரசு தவிக்கிறது.

இதனால் நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை பல மடங்கு உயர்ந்து உள்ளது. இதனால் சாமானிய, ஏழை மக்கள் அங்கு கடும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர். அதே சமயம் பொருளாதார நெருக்கடி காரணமாக அங்கு பெட்ரோல், டீசல் விநியோகத்திற்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பெட்ரோல் நிலையங்களில் பொதுமக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருந்து பெட்ரோல், டீசலை வாங்கிச் செல்கின்றனர்.

இந்தநிலையில், பெட்ரோல்-டீசல் வாங்க நீண்ட நேரமாக வெயிலில் காத்திருந்த 2 நபர்கள் சுருண்டு விழுந்து உயிரிழந்தனர். இது போன்ற சம்பவங்கள் மேற்கொண்டு நிகழாமல் தடுக்கவும், பெட்ரோல் வாங்கிச் செல்பவர்களின் பாதுகாப்பிற்காகவும் பெட்ரோல் நிலையங்களில் ராணுவத்தினர் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.