ரஷியாவுக்கு உச்சகட்ட எச்சரிக்கை விடுத்த அமெரிக்கா.. பரபரப்பு பதிலடி.!!

ரஷியாவுக்கு உச்சகட்ட எச்சரிக்கை விடுத்த அமெரிக்கா.. பரபரப்பு பதிலடி.!!


american-president-joe-biden-warn-to-russian-president

சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்கு பின்னர் அது பல நாடுகளாக பிரிந்த நிலையில், ரஷியா மட்டும் பிரிந்த பல பகுதிகளை தன்னுடன் இணைத்து பெரும் வல்லரசு நாடாக உருவாகியது. இதில், உக்ரைன் தனி நாடாக தன்னை அறிவித்த நிலையில், அதனை தன்னுடன் இணைக்கும் முயற்சியில் ரஷியா ஈடுபட்டு வருகிறது. 

America

இதனால் ரஷியா - உக்ரைன் இடையே சண்டை நடந்து வரும் நிலையில், உலக நாடுகள் இந்த விவகாரத்தில் தலையிட்டு ரஷியா உக்ரைனை தனி நாடாக எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் விட வேண்டும் என கோரிக்கைகள் வைத்து வருகிறது. இதுதொடர்பாக ரஷியா - அமெரிக்கா இடையே பல்வேறு பிரச்சனைகள் நடக்கிறது. 

America

இந்நிலையில், அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் - ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் ஆகியோர் தொலைபேசி வாயிலாக பேசுகையில், உக்ரைன் விஷயம் தொடர்பாக பேசியுள்ளனர். இதன்போது ரஷிய அதிபரிடம், உக்ரைன் பதற்றத்தை குறைக்குமாறும், உக்ரைனை ரஷியா ஆக்கிரமிக்க முயற்சித்தால், ரஷியாவும் அதன் நட்பு நாடுகளும் தக்க பதிலடி வழங்கும் என்றும் அமெரிக்கா அதிபர் எச்சரித்து இருக்கிறார்.