173 பயணிகளுடன் சென்ற விமானத்தில் திடீர் தீ விபத்து..! வைரல் வீடியோ..



american-airlines-denver-fire-incident

அமெரிக்காவில் விமானப் பாதுகாப்பு குறித்த கவலைகளை தூண்டும் வகையில் டென்வர் சர்வதேச விமான நிலையம் நேற்று காலை பரபரப்பை ஏற்படுத்தியது. புறப்பட இருந்த அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து பயணிகளிடையே பீதியை ஏற்படுத்தியது.

லேண்டிங் கியர் கோளாறு மற்றும் தீ விபத்து

நேற்று காலை 07:49 மணியளவில் மியாமி நோக்கி புறப்பட இருந்த அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் ஓடு பாதையில் செல்லும் போது லேண்டிங் கியர் செயலிழந்து, டயர் தீப்பற்றியது. இதனால் விமானத்தில் புகை பரவியது. புறப்படாமல் உடனடியாக விமானம் நிறுத்தப்பட்டு, அவசரநிலை அறிவிக்கப்பட்டது.

அவசர வெளியேற்றம் மற்றும் காயங்கள்

விமானத்தில் இருந்த 173 பயணிகள் மற்றும் 6 பணியாளர்கள் அவசர ஸ்லைடுகள் மூலம் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். இதில் 6 பேர் படுகாயம் அடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பயணிகள் பீதியுடன் வெளியேறும் காட்சிகள் பதிவு செய்யப்பட்ட வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.

இதையும் படிங்க: வீடியோ: பாதுகாப்பாக தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம்.!! 141 பயணிகளும் நிம்மதி பெரும் மூச்சு.!!

விமான நிலைய செயல்பாடுகள் பாதிப்பு

தீவிபத்து முழுமையாக கட்டுப்படுத்தப்பட்ட நிலையில், மாலை 2 மணி முதல் 3 மணி வரை விமான நிலையம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, 87 விமானங்கள் பாதிக்கப்பட்டன. தற்போது விமான நிலையம் வழக்கமான செயல்பாட்டிற்கு திரும்பியுள்ளது.

அமெரிக்கன் ஏர்லைன்ஸ் அதிகாரப்பூர்வ அறிக்கை

அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், "அனைத்து பயணிகளும், பணியாளர்களும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். எங்கள் பராமரிப்பு குழு விமானத்தை ஆய்வு செய்து வருகிறது. பயணிகளுக்கு ஏற்பட்ட அசௌகரியத்திற்கு வருந்துகிறோம்" என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த சம்பவம் விமானப் பாதுகாப்பு நடைமுறைகளின் அவசியத்தையும் அவசர கால நடவடிக்கைகளின் திறனையும் வலியுறுத்துகிறது. பயணிகள் மற்றும் பணியாளர்களின் உயிர் பாதுகாப்பே எப்போதும் முதன்மை என்பதை இந்த சம்பவம் மீண்டும் நிரூபித்துள்ளது.

இதையும் படிங்க: Video : புறப்பட்ட 5 நிமிடத்தில் தீப்பற்றி கொழுந்துவிட்டு எரிந்த விமானம்! பயணிகள் நிலை என்ன! வெளியான வீடியோ காட்சி...