அமெரிக்காவில் அசுர வேகத்தில் பரவும் கொரோனா.. சீனா மற்றும் இத்தாலியை பின்னுக்கு தள்ளி முதலிடம்!



america-leads-on-the-number-of-covid-19-cases

உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் அமெரிக்கா தற்போது 85,327 உடன் முதலிடத்தில் உள்ளது.

சீனாவில் துவங்கிய கொரோனா வைரஸ் முதலில் சீனாவில் மட்டும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இதுவரை அந்நாட்டில் 81,285 பேர் பாதிக்கப்பட்டு 3287 பேர் உயிரிழந்துள்ளனர். இறந்தவர்களின் பட்டியலில் 8215 எண்ணிக்கையுடன் இத்தாலி முதலிடத்தில் உள்ளது. அந்நாட்டில் பாதிக்கப்பட்டவர்கள் 80539.

Coronovirus

அமெரிக்காவில் மிகவும் தாமதமாக பரவ துவங்கிய கொரோனா வைரஸ் கடந்த ஒரு வாரத்தில் அசுர வேகத்தில் பரவி வருகிறது. தற்போது கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தை பிடித்துள்ளது. இளந்தவர்களின் எண்ணிக்கை 1294 ஆக உள்ளது.

அமெரிக்காவில் நேற்று 26.03.2020 ஒருநாளில் மட்டும் 16980 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்கு அடுத்தபடியாக ஸ்பெயினில் 8000, ஜெர்மனி மற்றும் இத்தாலியில் தலா 6000 பேருக்கு மேல் ஒரே நாளில் பபாதிக்கப்பட்டுள்ளனர்.