உலகம்

அடக்கடவுளே... ஆணுறுப்பில் அதை வைத்து கடத்தல்.. திறந்துபார்த்து ஷாக்கான அதிகாரிகள்..! கதறலோ கதறல்..!!

Summary:

அடக்கடவுளே... ஆணுறுப்பில் அதை வைத்து கடத்தல்.. திறந்துபார்த்து ஷாக்கான அதிகாரிகள்..! கதறலோ கதறல்..!!

வாகன தணிக்கையில் ஈடுபட்ட அதிகாரிகள், ஆணுறுப்பில் கோகைன் மற்றும் மெத்தையின் போதைப்பொருள் வைத்து கடத்தியவரை கைது செய்துள்ளனர். 

அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாணத்தில் காவல் துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, அவ்வழியாக வந்த காரை நிறுத்தி அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். காரில் வந்த நபரான பேட்ரிக் புளோரன்ஸ் (வயது 34) சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்றுள்ளார். 

அவரது காரில் அதிகாரிகள் நடத்திய சோதனையில், இருக்கைக்கு கீழே கைத்துப்பாக்கி இருந்துள்ளது. இதனைக்கண்டு அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர், உடலில் சோதனை செய்கையில், அவரது ஆணுறுப்பில் 2 பொட்டலம் கட்டப்பட்டு இருந்தது. அதனை அதிகாரிகள் சோதனை செய்கையில் 2 பொட்டலத்திலும் கோகைன் மற்றும் மெத்தம்பெட்டமைன் என்ற போதைப்பொருள் கண்டறியப்பட்டுள்ளது. 

காவல் துறையினர் அவரை கைது செய்த நிலையில், போதைப்பொருள் என்னுடையது கிடையாது. துப்பாக்கி என்னுடையது என்று பேட்ரிக் கதறி இருக்கிறார். அவர் போதைப்பொருள் வைத்திருந்த காரணத்தால், அவரை அதிரடியாக கைது செய்த காவல் துறையினர் சிறையில் அடைத்தனர். அவர் ஏற்கனவே கடந்த 2020 ஆம் வருடம் கோகைன் வைத்திருந்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு இருந்துள்ளார். இந்த சூழலில் தற்போது மீண்டும் கைதாகியுள்ளார்.  


Advertisement