அலட்சியத்தால் நடந்த சோகம்; விபத்தை ஏற்படுத்திய ஆம்புலன்ஸிலேயே அவசர சிகிச்சை.!

அலட்சியத்தால் நடந்த சோகம்; விபத்தை ஏற்படுத்திய ஆம்புலன்ஸிலேயே அவசர சிகிச்சை.!


Ambulance Made Accident Later Man Saved by Same Ambulance 


மனித உயிர் விலைமதிப்பற்றது. ஒவ்வொருவருக்கும் அவருடன் பயணிக்கும் குடும்பத்தினருக்கு எதோ வகையில் விபத்து ஏற்பட்டால், அவர்களின் உயிரை காக்க இன்றளவில் அவசர ஊர்தியின் சேவையை நாடுகிறோம். 

மக்களின் உயிரை பாதுகாக்கும் பொருட்டு, ஒவ்வொரு நாட்டிலும் அவசர ஊர்தி சேவை இயக்கப்பட்டு வருகிறது. எதிர்பாராத விபத்துகள் எங்கு ஏற்பட்டாலும், சில நிமிடங்களில் அங்கு விரைந்து பாதிக்கப்ட்டவர்களை மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை கிடைக்க அவை உதவுகின்றன. 

இந்நிலையில், பின்னோக்கி வந்த அவசர ஊர்தியில், ஓட்டுநர் சரிவர கவனிக்காமல், பாதசாரியாக நடந்து சென்றவரும் கவனிக்காமல் ஏற்பட்ட விபத்தின் வீடியோ வெளியாகி இருக்கிறது. அவசர ஊர்தியில் அடிபட்டு, அதிலேயே சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டவரின் நிலையை விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.