உலகம்

அடுத்த பீதியை கிளப்பிய சீனா..! உணவகத்தில் சாப்பிட்ட 2 குடும்பத்தினருக்கு ஏசி மூலம் பரவிய கொரோனா..!

Summary:

Air conditioner may have caused spread of coronavirus

உணவகம் ஒன்றில் இருந்த ஏசி மூலம் சீனாவில் சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் உஹான் நகரில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்தவும், மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் அணைத்து நாடுகளும் போராடிவருகிறது.

இந்நிலையில், சீனா சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பு ஒன்று சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பரவும் விதம் குறித்து பல்வேறு ஆய்வுகள் நடைபெற்றுவரும் நிலையில், ஏசி மூலம் கொரோனா பரவ வாய்ப்பிருப்பதாக ஒரு ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

சீனாவின் குவாங்சு பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில் மூன்று குடும்பத்தை சேர்ந்த நபர்கள் அமர்ந்து உணவருந்தியுள்ளனர். அதில் ஒருகுடும்பத்தை சேர்ந்த நபருக்கு கொரோனா பாதிப்பு இருந்துள்ளது.

மூன்றும் குடும்பமும் மிகுந்த இடைவெளியுடன் அமர்ந்து உணவருந்தியுள்ளனர். ஆனாலும் அங்கு இயங்கிக் கொண்டிருந்த ஏசி மூலம் கொரோனா பாதிக்கப்பட்ட நபரிடம் இருந்து மற்ற இரண்டு குடும்பத்தினருக்கு கொரோனா பரவியிருப்பது அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

இதனால் ஏசி மூலம் ஒருவரிடம் இருந்து 10 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே ஏசி பயன்படுத்தப்படும் பொது இடங்களில் மக்கள் கூடுவதை தவிர்ப்பது நல்லது.


Advertisement