தளபதி 69 படத்தில் விஜய்க்கு ஜோடி இவரா? அப்செட்டில் ரசிகர்கள்!
பள்ளியில் நடந்த பயங்கர குண்டுவெடிப்பு.. பள்ளி மாணவர்கள் 19 பேர் உடல் சிதறி பலி., 22 பேர் படுகாயம்.!
தொழுகையின் போது பள்ளி வளாகத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 19 மாணவர்கள் உயிரிழந்தனர்.
ஆப்கானிஸ்தான் நாட்டின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள மதரஸா பள்ளியில் நடந்த குண்டு வெடிப்பில் 19 மாணவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஐபக் நகரில் உள்ள அல் ஜிஹாத் மதரஸா பள்ளியில் தாக்குதல் நடந்துள்ளது.
பள்ளி மாணவர்கள் பிற்பகல் நேரத்தில் தொழுகையில் ஈடுபட்டு இருந்த சமயத்தில் நடந்த குண்டு வெடிப்பு நிகழ்வால், 19 மாணவர்கள் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர்.
தொழுகையில் ஈடுபட்ட 24க்கும் மேற்பட்ட மாணவர்கள் படுகாயம் அடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தாக்குதலுக்கு தற்போது வரை எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.