உலகம்

விமானத்தில் போதையில் 8 வயது சிறுவனிடம் வயதான பெண் செய்த மோசமான செயல்!

Summary:

A woman drunkenly hit an eight-year-old boy in the face with a water bottle

 கடந்த ஏப்ரல் மாதம் 12ஆம் தேதி அமெரிக்காவின் மியாமியில் இருந்து லண்டனுக்கு செல்லும் விமானத்தில் லூயிஸ் டிக்சான்என்ற 51 வயது நிரம்பிய பெண் பயணித்துள்ளார். இவர் விமானத்தில் ஏறும் போதே அதிகளவு மது அருந்திவிட்டு எறியுள்ளார். இந்தநிலையில், போதையில் இருந்த லூயிஸ் டிக்சான் அருகில் அமர்ந்திருந்த பெண் பயணியுடன் ரகளையில் ஈடுபட்டுள்ளார்.

மேலும், போதை தலைக்கேறிய அந்த பெண் மற்றொரு பயணியையும் அடிப்பதற்கு கை ஓங்கியுள்ளார். ஒருகட்டத்தில் தண்ணீர் பாட்டிலை 8 வயது சிறுவன் மீது வீசியுள்ளார். இது குறித்து சிறுவனின் தாய் என் மகன் தலையில் அடிபட்டது என விமான பணியப்பெண்ணிடம் கூறியுள்ளார். இதையடுத்து கையில் கைவிலங்கு மாட்டப்பட்டு விமானத்தில் லண்டன் வரை பயணம்செய்தார்.

அவர் லண்டனுக்கு வந்ததும் அவரை போலீசார் அழைத்துச்சென்றனர். இதனையடுத்து லூயிஸ் மீதான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் அவருக்கு 8 மாதங்கள் சிறை தண்டனையும், மதுவுக்கு அடிமையானவர்களுக்கான மறுவாழ்வு மையத்தில் சேர்க்கவும் உத்தரவிடப்பட்டது. இது குறித்து லூயிஸ் கூறுகையில், நான் செய்த தவறுக்கு மன்னிப்பு கோருகிறேன், இது போல இனி எப்போதும் நடந்து கொள்ள மாட்டேன் என கூறியுள்ளார்.


Advertisement