Video: டாம் குரூஸுக்கே டப் கொடுத்த இளைஞர்.. நண்பர்களை தண்ணீரில் தள்ளிவிட்டு தப்பிய தருணம்.!



a Vietnam Youth Narrowly Escape the Situation like Tom Cruise Stunt

இருசக்கர வாகனத்தில் செல்வோர் எப்போதும் கவனத்துடன் செல்ல வேண்டும் என்பது பொதுவான வாகன விதியாகும். ஆனால் வாகனத்தில் பயணிக்கும் பெரும்பாலானோர் இதனை கண்டு கொள்வதில்லை. சாலையில் அதிவேகத்தில் விதிகளை மீறி இரண்டு பேருக்கு பதில் நான்கு பேராக செல்வது அதிகரித்து வருகிறது.

கால்வாய்க்குள் வண்டியை விட்ட இளைஞர் :

அந்த வகையில், வியட்நாம் நாட்டில் நடந்த ஒரு சம்பவத்தின் வீடியோ வெளியாகியுள்ளது. ஒரு இருசக்கர வாகனத்தில் மூன்று இளைஞர்கள் பயணம் செய்த நிலையில், அவர்கள் அங்குள்ள கால்வாய் பகுதிக்கு அருகே வந்துள்ளனர். அப்போது பக்கவாட்டு சாலையில் கார் ஒன்று வந்த நிலையில், வாகனத்தை கட்டுப்படுத்த இயலாத இளைஞர் நேரடியாக கால்வாய்க்குள் வாகனத்துடன் விழுந்தார்.

இதையும் படிங்க: ஆண்களிடம் அதிகரித்த தற்கொலை.. ஆய்வில் வெளியான ஷாக் தகவல்.!!

பாலத்தை பிடித்து தப்பித்த இளைஞர் :

இதில் மூன்றாவதாக அமர்ந்து வந்த இளைஞர், டாம் குரூஸிடம் சண்டைக் காட்சிகளுக்கு பயிற்சி பெற்றவர் போல தனது கையை பக்கவாட்டில் நீட்டி பாலத்தை பிடித்து அதிர்ஷ்டவசமாக எந்த விதமான பிரச்சினையும் இன்றி தப்பித்துக்கொண்டார். இது தொடர்பான வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

வைரலாகும் வீடியோ :

இதையும் படிங்க: காதல் விஷயத்தில் யார் டாப்? ஆண்களா? பெண்களா?