சீனாவில் பயங்கரம்... தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்து... 36 பேர் உடல் கருகி பலி..!

சீனாவில் பயங்கரம்... தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்து... 36 பேர் உடல் கருகி பலி..!


a-terrible-fire-in-a-factory-in-china-36-people-were-bu

சீனாவில் தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பலர் உடல் கருகி பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சீனாவின் ஹெனான் மாகாணத்தில் தொழிற்சாலையில் நேற்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

அன்யாங் நகரில் உள்ள தனியார் தொழிற்சாலையில் நேற்று மதியம் யாரும் எதிர்பாராத விதமாக பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அந்தப் பகுதியை சுற்றிலும் கருமேகம் சூழ்ந்தார்போல் காணப்பட்டது. இந்த தீ விபத்து சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு படையினர் மற்றும் மீட்பு குழுவினர் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

மேலும் அதிகாலை வரை கொழுந்து விட்டு எறிந்த தீயில் கருகி 36 பேர் உயிரிழந்ததாகவும், மேலும் சிலர் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.