கனவால் ஏற்பட்ட விபரீதம்; ஆடுபட்டுவதாக நினைத்து தன் ஆண் உறுப்பை.. வெட்டி கொண்ட விவசாயி..!

கனவால் ஏற்பட்ட விபரீதம்; ஆடுபட்டுவதாக நினைத்து தன் ஆண் உறுப்பை.. வெட்டி கொண்ட விவசாயி..!


A disaster caused by a dream; A farmer cut off his male organ thinking he was fighting..

ஆப்ரிக்க நாடான கானாவை சேர்ந்தவர் கோஃபி அட்டா. 34 வயதான கோஃபி அட்டா ஒரு விவசாயி. மதிய நேரம், நாற்காலியில் அமர்ந்து தூங்கியுள்ளார். தூங்கும் போது அவருக்கு கனவு வந்துள்ளது. அதில், அவர் ஆடு வெட்டுவதாக அவருக்கு தோன்றியுள்ளது. அப்போது அவர் தூக்கத்தில் கையில் இருந்த கத்தியால் அவரது அந்தரங்க உறுப்பின் ஒரு பாகத்தை(testicles) தவறுதலாக வெட்டியுள்ளார். வலியால் கனவு கலைந்தவுடன், கண்விழித்து பார்த்து பதறிப்‌ போனார் கோஃபி. 

அந்த நேரத்தில் அவரது மனைவியும் வீட்டில் இல்லை. ரத்தத்துடன் துடித்துக் கொண்டிருந்த கோஃபியை அவரது சுற்றத்தார் உடனடியாக மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படாதவாறு மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்துள்ளனர். தற்போது ஓய்வில் இருக்கும் அவர் தன் கையில் கத்தி எப்படி வந்தது, நான் எப்படி இதை செய்தேன் என்று தெரிவில்லை என கூறியுள்ளார்.

மேலும் அவருக்கு மற்றொரு ஒரு அறுவை சிகிச்சைசெய்ய வேண்டும் என டாக்டர்கள் கூறியுள்ளனர். இந்த அறுவை சிகிச்சை முடிந்து ஒன்றரை மாதம் நன்றாக ஓய்வெடுத்தால் போதும் இயல்பாக செயல்படலாம் என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், கோஃபி தனது உயர் சிகிச்சைக்காக  தற்போது நிதி திரட்டி வருகிறார்.