டயனோசரின் முட்டையில் இருந்து பறவைகள் உருவானதா?.. சீன ஆய்வாளர்கள் கண்டுபிடிப்பு.!



a-dinosaur-embryo-discovered-in-china

கற்காலங்களில் வாழ்ந்த மக்களின் வாழ்க்கைமுறை, விலங்குகள் குறித்த ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. பூமிக்கடியில் மறைந்திருக்கும் பண்டைய கால விலங்குகளான டயனோசர் உட்பட பல விலங்குகளின் படிமங்கள் சேகரிக்கப்பட்டு, அதனை வைத்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

இந்நிலையில், சீனாவில் நடந்த ஆய்வில் டயனோசரின் கரு நவீன காலத்தில் உள்ள பறவைகளின் பரிணாம வளர்ச்சியை ஒத்துள்ள தோற்றத்தை அளித்துள்ளது என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

dinosaur

சீனாவில் டயனோசரின் கருமுட்டை கண்டறியப்பட்ட நிலையில், இந்த முட்டை குறித்த ஆய்வுகள் வரலாற்றுக்கு முந்தய உயிரினத்திடம் இருந்து நவீன பறவைகள் உருவாகியுள்ள ஆதாரம் தென்படுகிறது எனவும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்த முட்டை 70 வருடங்களுக்கு முந்தையவையாக இருக்கலாம் என்றும் தெரியவருகிறது.