அடக்கடவுளே! நடுக்கடலில் திடீரென தீப்பிடித்த படகு...பயணிகள் 271 பேரின் கதி என்ன?

அடக்கடவுளே! நடுக்கடலில் திடீரென தீப்பிடித்த படகு...பயணிகள் 271 பேரின் கதி என்ன?


a-boat-caught-fire-in-the-middle-of-the-sea

இந்தோனேஷியாவில் பாலித்தீன்வாரியை 271 பேருடன் சென்ற பயணிகளின் படகு தீப்பிடித்து பெரும் விபத்துக்குள்ளாகியுள்ளது. லிம்பர் துறைமுகத்திலிருந்து கீட்டாபாங் நகரை நோக்கி இந்த படக்கானது சென்றுள்ளது.

இந்த படகில் 236 பயணிகளும், 35 பணியாளர்களும் இருந்ததாக சொல்லப்படுகிறது. மேலும் காரங்ககேசம் கடற்கரையில் இருந்து 13 கிலோ மீட்டர் தூரத்தில் இந்த படகு திடீரென தீப்பிடித்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

Boat fire

மேலும் இந்த படகில் பயணித்த பயணிகளை காப்பாற்ற இரண்டு கடற்படை கப்பல்கள் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து மீட்பு படையினரும், மீனவர்களும் தீப்பிடித்த படகில் இருக்கும் பயணிகளை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இன்னும் இந்த கோர விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் விவரங்கள் பற்றிய தகவல்களை அந்நாட்டு அரசு வெளியிடாமல் உள்ளது.