அதிவேகத்தில் பைக் பயணமா?... மரணத்தை சந்தித்து மீண்டவரின் கேமிராவில் பதிவான பதைபதைப்பு காட்சிகள் இதோ.!

அதிவேகத்தில் பைக் பயணமா?... மரணத்தை சந்தித்து மீண்டவரின் கேமிராவில் பதிவான பதைபதைப்பு காட்சிகள் இதோ.!



a Biker got Accident While Travel High Speed after 4 Month he Release Video 

 

சாலைகளில் விலையுயர்ந்த இருசக்கர வாகனங்களை வைத்துக்கொண்டு, அதிவேகத்தில் பார்ப்போரை பதறவைக்கும் அளவு பயணிக்கும் நபர்கள் நமது உள்ளூரில் மட்டுமல்லாது உலகளவிலும் இருக்கிறார்கள். 

இவர்கள் பெரும்பாலும் தங்களின் உயிருக்கு சேதாரம் ஏற்படாத வண்ணம் பாதுகாப்பான ஆடைகளை அணிந்து பயணிப்பவர்கள். இந்த விடியோவை கண்டு புல்லரித்துப்போய் செயல்படும் நமது ஊர் இளசுகள், அதே வேகத்தில் விதியை மீறி பயணித்து விதியை முடித்துக்கொள்கிறது. 

இந்நிலையில், அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாணம், Daytona Beach சாலையில் இளைஞர் ஒருவர் சாலையில் அதிவேகமாக பயணம் செய்துகொண்டு இருந்தார். 

அவரின் வாகனம் 140 mph வேகத்தில் சென்றுகொண்டு இருந்தபோது, முன்னால் சென்றுகொண்டு இருந்த கனரக டிரக் மற்றும் காரை முந்திச்செல்ல முயன்று, இந்த வாகனங்களுக்கு முன்னால் சென்ற காரின் மீது மோதி விபத்தில் சிக்கினார். 

பின், அவர் வாகனத்தில் இருந்து நிலைதடுமாறி விழுந்து, பின்னால் வந்த கனகர லாரியின் மீது சிக்கி அதிஷ்டவசமாக 20 எலும்பு முறிவுகள் உட்பட பல உடல் உபாதையுடன் உயிர்பிழைத்தார். 

World news

விபத்தில் சிக்கி உயிருக்கு போராடியவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், ஒரு மாத கால தொடர் சிகிச்சைக்கு பின் அவர் உடல்நலம் தேறினார். தற்போது விபத்து நடந்து 4 மாதங்கள் கடந்துவிட்டன. 

தான் விபத்தில் சிக்கிய சம்பவம் குறித்து யூடியூபில் பதிவிட்டுள்ள அவர், "எனது தவறின் காரணமாக நான் விபத்தில் சிக்கினேன். எனது சிறிய பயிற்சியின் மீது நான் வைத்திருந்த அதீத நம்பிக்கை விபத்தில் சிக்க காரணமாக அமைந்தது. நல்வாய்ப்பாக நான் உயிரிழக்கவில்லை. 

எனது விடா முயற்சியை நான் கைவியவில்லை. முகத்தில் மட்டும் 20 முறிவுகள், எனது கை எலும்புகள் இரண்டும் உடைந்துபோயின. கல்லீரல் சேதமடைந்தது, முதுகெலும்பில் 2 முறிவுகள், விலா எலும்புகள் உடைந்துபோயின. 

இப்போது உடல்நலம் முன்னேறி வருகிறது. நான் எனது பயணத்தை தொடர விரும்புகிறேன். ஆனால், இப்போது முன்பை போல வேகத்தில் இல்லை, விவேகத்துடன் அணுகுவேன். நான் பொழுதுபோக்குக்கே பயணத்தை விரும்புகிறேன். அதனை நீண்ட நாட்களுக்கு தொடரவே நினைக்கிறன்" என தெரிவித்துள்ளார். 

இந்த சம்பவத்தில் இளைஞர் விபத்திற்குள்ளான பதைபதைப்பு வீடியோவும் இணைக்கப்பட்டுள்ளது. வீடியோவை பார்ப்பவர்கள், பைக்கை தாங்கள் இயக்குவதாக நினைத்தாலே, நமது ஊர்களில் நடக்கும் பாதி விபத்துகள் குறைந்துவிடும். ஏனெனில் அவரின் உயிர்காப்பு கவசம் அவரை காப்பாற்றியது. அவை இல்லாமல் விபத்தில் சிக்கினால் மரணமே பரிசாக கிடைக்கும்.