உலகம்

மீண்டுமொரு போர்! கொரோனோவை வென்ற 99வயது முன்னாள் ராணுவ வீரர்!

Summary:

99 year man cured drom covid 19

பிரேசில் நாட்டின் ராணுவத்தில் அதிகாரியாக இருந்தவர் எர்மெண்டோ பைவெட்டா. இவர் இரண்டாம் உலகப் போரின்போது ஆப்பிரிக்காவில் பிரேசிலிய ராணுவத்தில்  பணியாற்றியுள்ளார். இவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனாநோய் தொற்று உறுதிசெய்யப்பட்டது.

அதனைத்தொடர்ந்து அவர்  பிரேசில் நகரிலுள்ள ராணுவப் படை வீரர்களுக்கான மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் 99 வயது நிறைந்த அவர் 8 நாட்கள் தீவிர போராட்டத்திற்குப் பிறகு குணமடைந்துள்ளார். 

பின்னர் எர்மெண்டோ பைவெட்டா பிரேசில் ராணுவத்தினர் அணியும் பச்சை நிற தொப்பி அணிந்து கையை அசைத்தபடி மருத்துவமனையில் இருந்து மகிழ்ச்சியுடன் வெளியேறினார். மேலும் மருத்துவமனையில் உள்ள பணியாளர்கள் கைத்தட்டி உற்சாகப்படுத்தி அவரை அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து அந்நாட்டு ராணுவம், இரண்டாம் உலகப் போரில் பிரேசில் வெற்றிபெற்ற 75 ஆவது ஆண்டை  நினைவுகூறும் தினத்தில் எர்மெண்டோ பைவெட்டா சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளார். அதனால் அவர் மற்றொரு மாபெரும் போரில் வெற்றி பெற்றுள்ளார். இந்தமுறை கொரோனோவிற்கு எதிராக என அறிக்கை வெளியிட்டுள்ளனர்


Advertisement