குடும்பத் தகராறு.. ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் துப்பாக்கியால் சுட்டு கொலை!
அமெரிக்காவில் ஒருவர் குடும்பத்தகராறில் 3 பேரை சுட்டு கொலை செய்துவிட்டு தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் மாகாணத்தில் உள்ளது கிரனாடா ஹில்ஸ். அங்கே உள்ள லெட்டோ அவென்யூவில் ஒரு வீட்டில் துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து வந்து சோதனை நடத்தினர்.
அப்போது போலீஸ் சார் சம்பந்தப்பட்ட வீட்டின் கதவை திறந்து உள்ளே பார்த்தபோது அதிர்ச்சி தரும் காட்சி பார்த்துள்ளனர். அங்கு 2 பெண்கள் உள்ளிட்ட 4 பேர் உடலில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்த நிலையில் சடலமாக கிடந்துள்ளனர்.
இதனையடுத்து உடனடியாக சம்பவ இடத்திற்கு டாக்டர்கள் குழுவினர் மற்றும் தடவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்ட சோதனை நடத்தப்பட்டது. இதன் முதற்கட்ட விசாரணையில் இருந்தவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது.
இதில், அவர்களுக்கிடையே ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக 3 பேரை சுட்டு கொலை செய்துவிட்டு மற்றொரு நபர் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.