உலகம்

இறைவணக்கத்தில் கொடியேற்ற சென்ற மாணவர்களுக்கு காத்திருந்த பெரும் துயரம் ,அநியாயமாக பலியான பள்ளி குழந்தைகள், நடந்தது என்ன .!

Summary:

இறைவணக்கத்தில் கொடியேற்ற சென்ற மாணவர்களுக்கு காத்திருந்த பெரும் துயரம் ,அநியாயமாக பலியான பள்ளி குழந்தைகள், நடந்தது என்ன .!

பாகிஸ்தானில் பள்ளி ஒன்றில்  இறைவணக்கத்தில் கொடியேற்றத்தின் போது கொடி கம்பத்தில் மின்சாரம் பாய்ந்து 3 மாணவர்கள் மற்றும் ஒரு ஆசிரியர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 பாகிஸ்தானில் ,கைபர் பக்துன்குவா பகுதியை சேர்ந்த பெஷாவர் நகரில் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது.அங்கு  இன்று காலை இறை வணக்கம் நடைபெற்ற பொழுது  அங்கு மாணவர்கள் கொடியேற்ற சென்றுள்ளனர் .

இந்நிலையில் இரும்பினால் ஆன கொடிக்கம்பத்தின் அருகில் உள்ள மின்சார ஒயர் ஒன்று உரசியபடி இருந்துள்ளது .அப்பொழுது  மாணவர்கள் கொடியேற்ற முயற்சித்தபோது கம்பத்தில் மின்சாரம் பாய்ந்து மாணவர்களில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

 மேலும் அவர்களை காப்பாற்ற சென்ற ஆசிரியர் ஒருவரும் மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக பலியானார் .

இவ்வாறு பள்ளியில் 4 ,5 மற்றும் 8 ஆம் வகுப்பு படித்து வரும் மாணவர்கள் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது .

மேலும் மற்ற மாணவர்களின் பாதுகாப்பை கருதி இன்று விடுமுறை அளிக்கப்பட்டு பள்ளி மூடப்பட்டது.போலீசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .


Advertisement